தேனி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை நிர்வாகிகள் கூட்டம்

 

17/01/2018 தமிழக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில அன்புத்தலைவர் டாக்டர். திரு. ஜே. அஸ்லம் பாஷா அவர்கள் முதல் நாளான இன்று தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தின் போது! அத்துடன் நிரூபர்களுடனான சந்திப்பில் அவர் அளித்த பேட்டி!. . .


 

 

1. முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக வழக்கானது நீதிமன்றத்திலிருக்கும்போது கடந்த மூன்று வருடகாலமாக தமிழக படகு போக்குவரத்தை அனுமதிக்காத கேரள அரசு தற்போது தன்னிச்சையாக நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கேரளபடகு போக்குவரத்தை அனுமதித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

 

 

 

2. திண்டுக்கல் முதல் தேனி வரையிலான மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் போக்குவரத்தினை செயல்படுத்திடாமல் காலம் தாழ்த்திடும் மத்திய அரசானது, இம்முறை பட்ஜெட் அறிவிப்பில் அதற்கான நிதிநிலை தாக்கல் செய்து உடனடியாக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்!


 

 

3. எம்மத மக்களின் மனதும் புண்படாவண்ணம் நம் செயல்கள் இருக்க வேண்டுமெனும் காங்கிரஸின் சித்தாந்தத்தின் படி, கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆண்டாளை பற்றிய விமர்சனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல, அது கண்டிக்கத்தக்கது என்பதோடு அதை கண்டிக்கிறேன் எனும் பேர்வழியில் இஸ்லாமிய மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நபிகள் நாயகம் அவர்களை சம்பந்தப்படுத்தி இஸ்லாமிய மக்களின் மனம் நோகும்படி பேசியிருக்கும் எச்.ராஜா அவர்களின் பேச்சையும் மிக வன்மையாக கண்டிக்கிறேன். எச்.ராஜா அவர்கள் இனி நாவடக்கத்துடன் பேசவேண்டும்!

 


 

 

 

4. நாட்டில் பசிபட்டினி பிரச்சினைகள் ஆயிரமிருக்க, எந்நேரமும் முஸ்லிம் மக்களின் மீதே வன்மம் கொண்டு செயல்படும் இந்த அரசானது கொண்டுவந்திருக்கும் திட்டங்களான முத்தலாக், ஹஜ் மானியம் ரத்து போன்றவைகளெல்லாம் கண்டனத்திற்குரிய திட்டங்களாகும்!. . .
இதை மறுபரிசீலனை செய்து நாட்டில் நிலவிவரும் பல்வேறு சம்பந்தமான பொருளாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்திட இந்த அரசானது முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!. . .


நிகழ்வுகள்