இலவசமாக கொடுத்ததை உதாசீனப்படுத்துவது ஏன்? ரூ 1.10 கோடி மதிப்புள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக திற

இலவசமாக கொடுத்ததை உதாசீனப்படுத்துவது ஏன்? ரூ 1.10 கோடி மதிப்புள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக திறக்க பள்ளிகல்வி அமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில சிறுபான்மை துறை தலைவர் டாக்டர். திரு. ஜே. அஸ்லாம்பாஷா அவர்கள் கோரிக்கை!. .

1.10 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் வைத்திருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியை உடனடியாக திறக்கக்கோரி திரு. அஸ்லம்பாஷா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்! வேலூா் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூரில் செயல்பட்டுவந்த பள்ளியானது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததால் பாதுகாப்பு கருதி, மற்றும் கழிப்பிட வசதிகள் வேண்டி புதிய கட்டிடம் கோரப்பட்டது.

இதற்காக அக்கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராவ் குடும்பத்தினர் 35 லட்சம் மதிப்புள்ள 1.20 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தும் 1.10 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு கடந்த 2016 வருடம் வேலை தொடங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து ஆறுமாதகாலமாகிறது! எனவே பழைய கட்டிடத்திலிருந்து அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கட்டிடத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இந்த அரசு செவி மடுக்கவில்லை!

ஆனால் சமூகவிரோதிகள் மது அருந்துவது போன்ற தவறான காரியங்களுக்கு அப்புதிய பள்ளிக்கட்டிடத்தை பயன்படுத்தி வருவது வேதனையளிக்கிறது! எனவே உடனடியாக புதிய கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் டாக்டர். திரு. ஜே. அஸ்லாம்பாஷா அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்!

 

நிகழ்வுகள்