தமிழகத்தில் இயங்கி கொண்டு இருக்கும் அதிமுக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் சை

தமிழகத்தில் இயங்கி கொண்டு இருக்கும் அதிமுக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் சையும் அரசாகும். வாணியம்பாடியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லாம் பாஷா பேட்டி.

வாணியம்பாடி டிச 9 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 71வது பிறந்தநாள் விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு வேலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மைத்துரை தலைவர் இலியாஸ் கான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை மாநில தலைவர் அஸ்லாம் பாஷா கலந்துகொண்டு சோனியா காந்தியின் 71வது பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டியும், அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து அன்ன தானம் வழகங்கி பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது –

 

 

- கடந்த காலங்களில் கன்னியகுமாரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் உள்ளரங்கத்தில் பிரார்த்தனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி பெற்று இருந்தும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துறை முதலில் அனுமதி அளித்து, பிறகு அனுமதி இல்லை என்று அந்த கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்துள்ளார். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை துணை தலைவராக உள்ள வழக்கறிஞர் கியுபட்சன் மனித உரிமை கழகத்திலும், உச்காநீதிமன்றதிலும் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துறை வழக்கறிஞர் கியுபட்சன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து அவரை சித்ரவதை செய்வதற்கு திட்டத்தை வகுத்து வருகிறார். இந்த செயல் வேதனை அளிக்கிறது. வழக்கறிஞர் கியுபட்சனுக்கு எதாவது நேர்ந்தால் அதற்க்கு முழு பொறுப்பு தமிழக அரசும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துறை பொறுப்பாவார்கள் என்றார்.

 

 

 

 


சென்னையில் நவாப் காலத்தில் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு கல்வி மேம்படுத்துவதற்காக மதர்சயே ஆசம் பள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள இடத்தை தமிழக அரசிடம் தானமாக வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு அதிகாரிகள் இரவோடு இரவாக இடிக்கும் நோக்கத்தில் ஜேசிபி இயந்தரங்கள் கொண்டு அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். தகவல் அறிந்து பகுதி மக்கள் தடுத்ததால் அந்த பணி கைவிடப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மை சமுதாய மக்களுக்கு ஒரு தூணாக இருந்தார். தமிழகத்தில் இயங்கி கொண்டு இருக்கும் அதிமுக அரசு முன்னாள் முதல்வருக்கு துரோகம் செய்யும் விதத்தில் உள்ளது.

கன்னியகுமாரி மாவட்டத்தில் பெருபான்மை வசிக்கும் மக்கள் கிறிஸ்துவர்கள். மேலும் காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் தமிழக அரசு அங்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. ஒகி புயல் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வீடு திரும்பவில்லை. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கன்னியகுமாரி மாவட்டத்தில் இரண்டு மாதத்திற்கு மட்டும் மின்சாரம் கட்டணம் சலுகை வழங்கி உள்ளது. குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத்அஹமத், மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் பைசல்அமீன், நகர இளைஞரணி தலைவர் முதசீர்பாஷா, பொதுசெயலாளர் முகமதுசகி, நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கவியரசன், நகர இளைஞரணி துணைத் தலைவர் சின்னராஜ், நகர எஸ்சிஎஸ்டி பிரிவு தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்வுகள்