காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு காந்திய வழியில் பூமாலை போட்டு போராட்டம்

 

 

 

வாணியம்பாடியில் இறப்பு சான்றிதழ் கேட்டு வந்த முதியவரை அவதூராக பேசிய நகராட்சி ஊழியரை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு காந்திய வழியில் பூமாலை போட்டு போராட்டம்

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் மகாலட்சுமியின் இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதற்க்காக மகாலட்சுமியின் சித்தப்பா ஈஸ்வரன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன் மனுபோட்டுள்ளார்.இதற்காக பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் இன்று இது சம்மந்தமாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்த ஈஸ்வரனை பிறப்பு இறப்பு சான்றிதழ் பிரிவில் பணிபுரியும் எழுத்தாளர் சீனிவாசன் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியுள்ளார்.

 

 

 

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் சிறுபாண்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம்பாஷா தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு நகராட்சி அலுவலர்களுக்கு மாலை அணிவித்தும் பூ கொடுத்தும் நகராட்சி அலுவலகத்திற்கு வரும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்களிண் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கவும் அவர்களை அவமரியாதையாக பேசாமல் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என காந்திய வழியில் போரட்டம் செய்தனர் .இதனால் சிலமணி நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது


 

 

 

நிகழ்வுகள்