கல்வி புரட்சி தினமாக அறிவிக்க வேண்டும் காங்கிரஸ் சிறுபாண்மைத்துறை கோரிக்கை

வாணியம்பாடி,நவ.11

வாணியம்பாடி கல்வித் தந்தை அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை  கல்வி புரட்சி தினமாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைத்துறை மாநில தலைவர்.டாக்டர் அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

மறைந்த முன்னாள் கல்வியமைச்சர்அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு  வாணியம்பாடியில் உள்ள காங்கிரஸ் சிறுபாண்மைதுறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த  அபுல்கலாம் ஆசாத் அவர்களின் படத்திற்கு  நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைத்துறை சார்பில் தலைவர் முதசீர் அகமது தலைமையில்மாலைஅணிவித்துஅஞ்சலிசெலுத்தும்நிகழ்ச்சிநடைபெற்றது.

சிறுபாண்மைதுறை மாவட்ட தலைவர் இலியாஸ் கான்,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் பைசல் அமீன்,காங்கிரஸ் கமிட்டி நகரதலைவர் பரீத் அகமது,ஈஸ்வரன்,விஜயலட்சுமி,அப்துல்லா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.நகர துணைத்தலைவர் கவியரசன் அனைவரையும் வரவேற்றார்.

டாக்டர் அஸ்லம் பாஷா

இதில் மாநில தலைவர்.டாக்டர் அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு  அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்லம் பாஷா:-

அபுல்கலாம் ஆசாத் இந்தியாவின் முதல் கல்வியமைச்சராவார்.நாட்டில் கல்லாமை எனும் இருளை நீக்கி கல்வி எனும்அறிவொளியை உருவாக்கி தந்த மாமேதை அபுல்கலாம் ஆசாத். கல்வித்துறையில் பல புரட்சிகளை செய்ததால்  அனைவராலும் இன்று வரை ,கல்வித் தந்தை என்று  அழைக்கப்பட்டு கொண்டிருப்பவர்.இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில நமது நாட்டில் முதன் முதலில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவினார்.

 

 

கல்லூரிகளில்  முதன் முதலில் பல்கலைகழக மானியக் குழுவை ஏற்படுத்தினார்.

சிறந்த பத்திரிக்கையாளராகவும் தலைசிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர்.தனது முப்பத்தி ஐந்து வயதில் காங்கிரஸ் கட்சியில்இணைந்தவர்,தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கிலாஃபத் இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.

நிகழ்வுகள்