ராகுலை தரக்குறைவாக விமர்சித்த ஒய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுங்கள்: காங்கிரஸ் புகார்

ஜூலை 4, 2016: ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம் பாட்ஷா புகார் அளித்துள்ளார். ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை முகநூல் பதிவு மூலம் அவதூறாக விமர்சித்திருந்தார். “ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான்” என்று அவதூறு பதிவொன்றை எழுதி, பிறகு இதை தான் எழுதவில்லை. இதில் இருக்கும் கருத்து எனக்கு உடன்பட்டதே என விளக்கம் கொடுத்தார். சமூக ஊடகங்களிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும் கண்டனம் கிளம்பிய பிறகு அந்தப் பதிவை நீக்கினார் ஒய். ஜி. மகேந்திரன். இந்நிலையில் சமூக நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் பேசிய ஓய்.ஜி.மகேந்திரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் மனு அளித்திருக்கிறார் அஸ்லாம் பாட்ஷ.

நிகழ்வுகள்