காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு

 

 

 

 

காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர். வாணியம்பாடி டிச 28 : காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு தலைவர்கள் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். வாணியம்பாடி நகர சிறுபான்மை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் வி.முதஸ்சிர் பாஷா தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா, வாணியம்பாடி பஸ்நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கும், கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர், ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.எம்.பைசல் அமீன்,, சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் எ.இலியாஸ் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் எம்.முஜம்மில் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள்