ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசணை கூட்டம்

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

 

 

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம்பாஷா  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி ஆலோசணை கூட்டம் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன்,  நகர் தலைவர் கோபி மற்றும் சிறுபான்மையினர்துறை மாநில துணை தலைவர் ரமணிபாண்டியன், முன்னால் மாநில சிறுபாண்மையினர் பிரிவு செயலாளர் நிஜாம்அலிகான், முன்னால் மாவட்ட  தலைவர் விக்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணகாந்தி, சிறுபாண்மையினர்துறை மதுரை மாவட்ட பொருப்பாளர் மீர்பாஷா, வழக்கறிஞர் அணி தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

 இந்த ஆலோசகை;கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அஸ்லம்பாஷா தமிழகம் முழுவதும் நான் சிறுபான்மையினர் மக்களான இஸ்லாமிய, கிறித்துவ மக்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் துல்கீப், முத்துகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மையினர்துறை தலைவர் ரஹ்மான், மகளிர்அணி மாவட்ட தலைவி சகுந்தலாதேவி, மாவட்ட இலக்கிய அணிதலைவர் முருகேசன், ராமநாதபுரம் வட்டார தலைவர் கோபால், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டி  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள்  ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வுகள்