வாணியம்பாடியில் நியு டவுன் சுரங்கபாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கி முடிக்கவேண்டும்

வாணியம்பாடியில் நியு டவுன் சுரங்கபாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கி முடிக்கவேண்டும்  காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கோரிக்கை.

வாணியம்பாடியில் நியு டவுன் ரயில்வே கேட் சுரங்கபாதை அமைக்கும் பணியை தொடங்கி பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்துள்ளார். வாணியம்பாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார் அந்த அறிக்கையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மையபகுதியில் அமைந்துள்ள நியுடவுன் ரயிவே கேட் ரயில் செல்வதால் நாள் ஒன்றுக்கு 100 முறைக்கு மேல் கேட் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

 


 வாணியம்பாடி மற்றும் இன்றி பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் பள்ளிகல்லூரி மாணவர்கள்பணிக்குசெல்வோர்,மருத்துவமனை, காவல்நிலையங்கள், நீதிமன்றவளாகம்,வட்டாட்சியர் அலுவலகம் ,சார்பதிவாளர் அலுவலகம் செல்வோர் என அனைவரும் இந்த ரயிவே கேட்டை கடந்துதான் வாணியம்பாடி நகரபகுதிக்குள் நுழையமுடியும்.இங்கு பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க உடனடியாக மேம்பாலமோ அல்லது சுரங்கபாதையோ அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

 


மேலும் திமுக ஆட்சியின் போது வேலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் பலமுறை கோரிக்கை வைத்தும் திமுக காங்கிரஸ் கூட்டணியின் போது தொடர்ந்து குரல் கொடுத்தோம் இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கு சுரங்கபாதை அமைக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டு தற்போது மத்திய மாநில அரசுகள் இணைந்து சுரங்கபாதை ரூ.18 கோடி நிதி ஒதுக்கியது.கடந்த 11 ந்தேதி சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கவுள்ளதால் ரயில்வே கேட் மூடபடுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டு ரயில்வே துறை கேட்டின் இருபுறமும் பள்ளங்கள் தொண்டிவிட்டது.இதுநாள் வரை அப்பணியை தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.பொதுமக்கள் ஓரளவு பயன்படுத்தி கொண்டிருந்த சாலை முழுவதும் மூடப்பட்டு விட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 


எனவே பணியை உடனே தொடங்கி விரைவில் முடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இப்பணி தொடங்குவதில் தாமதம் காட்டுவதற்கு காரணம் வரும் நவம்பர் மாதம் 14 தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் சிதரிகிடக்கும் அதிமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காகவே சுரங்கபாதை பணியை தொடங்கபோவதாக கூறி கேட்டை மூடிவிட்டு நாடகம் ஆடுகிறது என்ற சந்தேகதை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரங்கபாதை அமைக்கும் பணியை உடனே தொடங்கி விரைவில் முடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நிகழ்வுகள்