குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க குழந்தைகளை விற்பனை செய்தல் (தடுப்பு) சட்டம்-198

ஆங்கில நாளேடான "தி இந்து" -வில் 1-9-2016 தேதி அன்று வெளியான செய்தியில்2014 - ஆம் ஆண்டில் இரண்டாமிடத்திலும்தற்போது மூன்றாம் இடத்திலும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் அக்கறையற்ற  அஜாக்கிரதையையே வெளிக்காட்டுகிறது.  வெளிநாட்டு வேலை என இந்திய தொழிலாளரை பல லட்சம் ருபாய் பணத்தை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி மோசடி செய்யும் ஏஜெண்டுகளைஇந்திய தண்டனை சட்டம் பிரிவு 370 -யின் கீழ் வழக்கு பதிவு செய்ய தமிழக காவல்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதுகுற்றவாளிகளுக்கு விலைபோய்விட்டார்களா அல்லது சட்டம் தெரியாதா என சந்தேகத்தை எழுப்புகிறது.


தமிழகத்தில் நாளொன்றிற்கு ஐந்து குழந்தைகள் காணாமல் போவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், 23.03.2016 அன்று செய்தி வெளியாகியுள்ளது.  இந்திய டுடே நாளேட்டில், ஏழு கடத்தல்கார்கள் குழந்தைகளை தத்து எடுக்கிறோம் என ஏமாற்றி குழந்தைகளை கடத்தியதாக 07.11.2016 செய்தி வெளியாகியுள்ளது.  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், மனித கடத்தல் குற்றங்கள் இருபத்தியைந்து சதவிகிதம் இந்தியாவில் உயர்ந்துள்ளதாக, தேசிய குற்ற பதிவு பீரோ புள்ளி விபரம் வெளியிட்டுள்ளதாக 30.08.2016 அன்று செய்தி வெளியாகியுள்ளது.

 

மூன்று வயது முகமத் தன்வீர் என்ற குழந்தை காணாமல் போனதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் குற்ற எண்: 75/17 என வழக்கு பதிவு செய்பட்டு, சுவரொட்டிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பீதியை கிளப்புவது மட்டுமல்ல, காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாக உள்ளது.

 

திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இதுவரைக்கும் 140 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சத்தின் கீழ் காவல் துறை அதிகாரிகள் மூலமாக செயலபடும் Anti Human Trafficking Unit செயல்படாமல் முடங்கிகிடக்கிறதா என ஐயம் எழுகிறது.

தமிழக அரசும், மத்திய அரசும் போர்கால அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுகி, குழந்தைகள் கடத்தப்படுவதை தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த நிலை தொடருமானால், அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் போராட்டம் வெடிக்கும் என்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.

நிகழ்வுகள்