முஸ்லீம் பெண்களின் உரிமை காப்பாற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது முதலை கண்ணீர் வடி

முஸ்லீம் பெண்களின் உரிமை காப்பாற்றப்படும் என பிரதமர்  நரேந்திர மோடி கூறுவது முதலை கண்ணீர் வடிப்பது போன்றது. தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைதுறை  மாநிலத தலைவர் டாக்டர் ஜெ .அஸ்லம் பாஷா கண்டனம்.


பத்திரிகை செய்தி:  வாணியம்பாடி, ஏப்.19: வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநிலத் தலைவர் டாக்டர் ஜெ. அஸ்லம் பாஷா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைக்குட்பட்ட முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் படி தான் முத்தலாக் பயன்படுத்தி வருகிறது.  


இவ்வாறு இருக்க முத்தலாக் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டில் தினந்தோறும் வன்கொடுமை, சாதி மற்றும் மதம் சார்ந்த ஆணவ கொலைகளால் பெண்கள் படுகாலை செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

 

மத்திய அரசு கண்டிப்புடன் கூறியும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் காக்கும் கமிட்டிகள் அமைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதற்கான நீதி கிடைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிதுறையில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இவ்வாறு பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரின் உரிமைகளை காக்க எவ்வித நடவடிக்கை எடுக்காத பிரதமர் தற்போது முத்தலாக் விவகாரத்தில் மட்டும் முஸ்லீம் பெண்கள் உரிமை காக்கப்படும் என கூறுவது முதலை கண்ணீர் வடிப்பது போன்றது. பிரதமரை யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

நிகழ்வுகள்