கிறிஸ்தவ சிறுபான்மையினரால் நடத்தப்படும் கம்பேஷன் இன்டர்நேசனல் எனும் சர்வதேச தொண்டு நிறுவனத

கிறிஸ்தவ சிறுபான்மையினரால் நடத்தப்படும் கம்பேஷன் இன்டர்நேசனல் எனும் சர்வதேச தொண்டு நிறுவனம், 28 நாடுகளில், சமுதாயத்தில் காணப்படும் ஏழை குழந்தைகளுக்கு, ஜாதி மத பாகுபாடின்றி, வறுமை ஒழிப்பு மற்றும் சிறந்த கல்வி வழங்குவதை பிரதான நோக்கமாககொண்டு, பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறது.

 

1968 வருடம் முதல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் முன்னேற்ற நல மையங்கள் அமைத்து, அதன் ஊழியர்களை நியமித்து செயல்பட்டு வருகிறது.  இந்தியாவில் சமுதாயத்தில் பின் தங்கிய 22 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களான 1,45,000 பேருக்கு, சுகாதாரமான உணவு, தரமான கல்வி, மருத்துவம் மற்றும் பல்வேறு சேவைகளை ஜாதி மத பாகுபாடின்றி, இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்து வந்தது.  இருப்பினும் 02.05.2016 அன்று, கம்பேஷன் இன்டர்நேசனல் நிறுவனத்தை, இந்திய அரசு முன் அனுமதி பெறவேண்டிய பட்டியலில் சேர்த்தது.  அதனால் கம்பேஷன்

                                                                                                                                    1.

இன்டர்நேசனல் நிறுவனம் வழங்கி வந்த நிதியுதவி நிறுதப்படவேன்டியதாயிற்று. எனவே 1,45,000 மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல், படிப்பை தொடர இயலாமல் அவதிப்படுகின்றனர்.  7,486 ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியமின்றி அவதியுறுவதால் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

            1,45,000 மாணவர்கள் கல்வி பயிலவும்,  7,486 ஊழியர்களுக்கு வேலைகிடைக்க, மாற்றுவழியினை ஏற்பாடு செய்யாமல், படிப்பை தொடரமுடியாத வண்ணம் மாணவர்களையும், வருமானம் தடைபட்டு பிழைப்பிற்கு வழியின்றி, வேலையின்றி, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் அவதியுறும் வண்ணம், இடையூறு ஏற்படுத்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பா.ஜ.க. மத்திய அரசினை வன்மையாக கண்டிக்கிறோம்.  மாணவர்கள் படிப்பை தொடருவதற்கும், ஊழியர்களுக்கு வேலைவழங்கி வாழ்வளித்திட, மத்திய அரசு  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், தேசிய அளவிலும், அனைத்து மாநிலத்தின் மாவட்டங்களிலும் தீர்வுகாணும் வரை போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் முடிவினை தெரிவித்துகொள்கிறோம்

நிகழ்வுகள்