வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி 46 பிறந்த நாள் விழா.

வாணியம்பாடி ஜூன் 19 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் 46 பிறந்த நாள் விழா காமராஜபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் 8வது வார்டு தலைவர் மித்துன் தலைமை தாங்கினார். நகர தலைவர் பரீத் அஹ்மத், நாட்றம்பள்ளி ஒன்றிய தலைவர் எம்.பி.முருகன், ஆலங்காயம் பேரூர் தலைவர் ஜெயபால் , உதயேந்திரம் பேரூர் தலைவர் கார்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத்துறை மாநில தலைவர் வழக்கறிஞர் ஜே.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு ராகுல் காந்தி 46 பிறந்த நாள் முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் 500கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துனைத்தலைவர் சாந்தகுமார், மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் இலியாஸ்கான், நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத்துறை தலைவர் முதஸ்சிர் பாஷா, நகர காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எஸ்.கவியரசன், நகர எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜ்குமார், ஷபி, சமியுல்லா உட்பட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் புஷ்பராஜ் நன்றி கூறினார். 

picpic

நிகழ்வுகள்