சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் சிறுபான்மைத்துரை

சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூடத்தில் தீர்மானம்.

வாணியம்பாடி மார்ச் 28 : வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தனியார் மண்டப்பத்தில் நடைபெற்றது. கூடத்திற்கு சிறுபான்மைத்துரை மாநில தலைவர் ஜே.அஸ்லம் பாஷா தலைமை வகித்தார். தமிழ்க காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை அரசியல் ஆலோசகர் மோகன் காந்தி, காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணைத்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் இலியாஸ் கான் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சி தெனிந்தியா சிறுபான்மை துறை பொறுப்பாளர் மஸ்தான் வலி, வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலூர் ஈ.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து வெற்றி பெற முடியும் என்று ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடத்தில் பைசல் அமீன், கவியரசன், சாந்தகுமார், செந்தில் குமார், எம்.பி.முருகன், கிரிஷ்ணமூர்த்தி, ஜெயப்பால், முதசிர் பாஷா, ராஜ்குமார், கார்திக்குமார்,மகளிர் அணி விஜயலட்சுமி,கிரிஜா, சரிதா உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நன்றி நகர தலைவர் பாரீத் அஹமத் நன்றி கூறினார்.

sdffss

நிகழ்வுகள்