காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் அஸ்லம் பாஷா பேட்டி

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் உண்மை நிலை அறிந்து செயல் படவேண்டும். வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் அஸ்லம் பாஷா பேட்டி.

வாணியம்பாடி மார்ச் 16 : காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநிலத்தலைவர் அஸ்லம் பாஷாவின் அரசியல் மற்றும் போது சேவையை பாராட்டி தில்லியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் இந்த ஆண்டிற்க்கான விருதுயினை வழங்கி பாராட்டியுள்ளனர். இதனை பெற்றுக்கொண்டு வாணியம்பாடிக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையத்தில் கட்சியினர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது தன்னுடையே அரசியல் மற்றும் போது சேவையை பாராட்டி தில்லியில் உள்ள தொண்டு நிறுவனம் விருது வழங்கி இருப்பது பெருமை அளிக்கிறது. மேலும் உண்மையான தேர்தல் விதிகளை அதிகாரிகள் கடை பிடிக்க வேண்டு அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் உண்மை நிலை அறிந்து செயல் படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

நிகழ்வுகள்