வாணியம்பாடி அருகே பலவேறு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

வாணியம்பாடி பிப் 24 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றம் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயத்தில் பலவேறு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி தனியார் மண்டப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார்.நகர செயலாளர் கார்த்திக்,பொருளாளர் பஷீர் ,துணை செயலாளர் வேலங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர இணை செயலாளர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது சுமார் 250 பேர் பலவேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.புதியதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் அஸ்லம் பாஷா ஷால்வை அணிவித்து வரவேற்றார் .நிகழ்ச்சியில் நகர மகளீர் காங்கிரஸ் தலைவர் சங்கீதா,கோவிந்தசாமி,வி.கே.ராஜன்,பூபாலன்,கிட்டு,வாழை ரவி உட்பட நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் கட்சியின் நகர துணைத்தலைவர் பாபையன் நன்றி கூறினார்.

fs fs

நிகழ்வுகள்