வாணியம்பாடி நகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர போராட்டம் நகரில் பதற்றம் நிலவுகிறது

வாணியம்பாடி, பிப் 11

வரும் 21 ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பொது கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு

வாணியம்பாடி நகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் ;
நகரில் பதற்றம் நிலவுகிறது

இதன் விவரம் :
பிப்ரவரி
21 ம் தேதி நடக்க இருந்த பொது கூட்டத்தில் 
காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவன் கலந்து கொள்ள இருந்தார்.
இந்நிலையில் இதற்கு திடிரென அனுமதி மறுத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது

பொதுகூட்ட எற்பாடுகளை சிறுபான்மை தலைவர் அஸ்லாம் பாஷா செய்து வந்தார் .
நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்லாம் பாஷா "இதற்கு முழு முதல் காரணம் ஊழல் நிறைந்த அ.தி.மு.க. அரசு தான்; நகர தலைவர் திருமதி நிலோபர் கபில் இதன் பின்னால் உள்ளார்.

1000 ரூபாய் கட்டி ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி வாங்கி விட்ட நிலையில் தற்போது திடிரென அனுமதி மறுப்பது உள்நோக்கம் கொண்டது,அனுமதி இல்லையேனில் 1000 ரூபாய் எதற்காக வாங்கினார்கள்? ( அதற்கான ரசீதை காண்பித்தார் )

வாணியம்பாடி கோட்டையில் உள்ள ஆஸ்பத்திரி தெருவில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரிஜிஸ்டர் ஆபிசு- ஐ பினாமி மூலம் சில லட்சங்களுக்கு மோசடி செய்து வாங்கிய நிலோபர் கபில், அதை தன் மகனுக்கு ஆஸ்பத்திரி கட்ட கொடுத்துள்ளார் .
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தால் இது பற்றி பேசுவார்கள் என பயந்து நிலோபர் கபில், குள்ள நரித் தனத்தை வெளிப்படுத்தி உள்ளார்

காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு நிறைந்த நூற்றாண்டு பாரம்பரிய 
கட்சி,வன்முறை நடக்க வாய்ப்பே இல்லாத நிலையில் எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது?

எனினும் பொதுகூட்டம் திட்டமிட்டபடி 21 ம் தேதி வாணியம்பாடியில் அதே வார சந்தை மைதானத்தில் நடைபெறும்,அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள படும் என அஸ்லாம் பாஷா சவால் விடுத்துள்ளார்.

 

நிகழ்வுகள்