வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்குள் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்குள் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா.
பொதுக்கூட்டம் நடத்த தடையில்லா சான்று வழங்குவதில் இழுத்தடிப்பால் ஆத்திரம்.

வாணியம்பாடி பிப் 11 : வாணியம்பாடி வாரசந்தை மைதானத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை சார்பில் வரும் 21ஆம் தேதி பொதுக்கூட்டம் நடுத்த உள்ளனர். இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் E.V.K.S.இளங்கோவன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்ப்பாளர் நடிகை குஷ்பூ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டம் வரசந்தை மைதானத்தில் நடை பெற உள்ளதால் நகராட்சியில் தடையில்லா சான்று பெறவேண்டும். இதற்காக கட்சியினர் கடந்த மாதம் 11ஆம் தேதி முறைப்படி நகராட்சி நகரமைப்பு அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாதமாகியும் தடையில் சான்று வழங்காமல் கட்சியினரை அலைக்கழிப்பு செய்துவந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் நகரமைப்பு அலுவலகத்திற்கு சென்று நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன்யிடம் தடையில்லா சான்று தொடர்பாக கேட்ட போது கொடுத்த மனு காணமல் போய்விட்டதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் நகரமைப்பு அலுவலர் அறை முன்பாக தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறுப்பு ஆணையர் சம்பத் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுவார்த்தை நடத்தினார்,மேலும் பொதுக்கூட்டம் நடத்த தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நகராட்சி அலுவலகத்துக்குள் சுமார் ஒருமணி நேரம் பெரும் பரபரபை ஏற்பட்டது


picfs 
 

நிகழ்வுகள்