புத்தாண்டுத் திருநாள்: திரு.J.அஸ்லம் பாஷா வாழ்த்துச் செய்தி

வாணியம்பாடி டிச 31: புத்தாண்டுத் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு. J.அஸ்லம் பாஷா, மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கால வெள்ளத்தில் சோதனை சூழல்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு, 2015 விடைபெற்று 2016ம் ஆண்டில் பிரவேசிக்கிறோம். புதியதோர் சமுதாயம் காண, இன்றைய சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினராக வாடும் சிறுபான்மையினர், விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தாய்மார்கள், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்றோரது வாழ்வு சிறக்க வேண்டும்.

ஜாதி மத பேதமின்றி, வறுமை,, வேலையில்லாத் திண்டாட்டம்,, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் -ஒழுங்கு சீர்கேடு போன்றவை அறவே இந்த ஆண்டோடு ஒளிந்து, வரும் 2016-ம் ஆண்டாவது அமைதியும், முன்னேற்றமும், நல்வாழ்வும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கட்டும். இருளுக்குப் பின்னர் வெளிச்சம் வந்துதானே தீரும் என்ற நியதிக்கு ஏற்ப வளமும் செழிப்பும் தமிழகத்திற்கு 2016ம் ஆண்டு வழங்கும் எனும் நம்பிக்கைக் கொள்வோம் .
 
அதற்கானதோர் நல்லாட்சி காங்கிரஸ் தலைமையில், தமிழ்நாட்டில் காண நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இந்த நன்னாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எனது இதய மார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு. J.அஸ்லம் பாஷா புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

நிகழ்வுகள்