வாணியம்பாடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் திரு.J.அஸ்லம் பாஷா அறிக்கை:

வாணியம்பாடி, டிச.28: வாணியம்பாடி நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,  மாநில சிறுபான்மை தலைவர் திரு.J.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

தமிழகத்தில் தொடர்ந்து தோல் தொழிற்சாலைகளை முடக்கி வரும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து வருகிற ஜனவரி மாதத்தில் மாபெரும் போராட்டம் நடத்தபோவதாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு.J.அஸ்லம் பாஷா அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக 500க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட  சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர் .ஆனால் மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிகளின் படி நடக்கவில்லை என்ற பொய் குற்றசாட்டை வைத்து தொழிற்சாலைகளை முடக்கி வருகின்றன. இதனை மத்திய ,மாநில அரசுகள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் நடக்கும் குளறுபடிகளை களையெடுத்து  ஆந்திர மாநிலத்திற்கு இடம் பெயர  இருக்கும் தோல் தொழிற்சாலைகளை தடுத்து, தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான   சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும், தோல் தொழில் ஏற்றுமதியின் மூலம் கிடைக்க கூடிய ஏற்றுமதி மானியத்தினை அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் திரும்ப அளிக்க வேண்டும் என்றும்.


மேலும் தமிழகத்தில் சர்விஸ் சாலையே  இல்லாத மேம்பாலம், வாணியம்பாடி மற்றும் புதூர் மக்கள் அச்சத்தில் பயணம் செய்யும் நிலையில் இருப்பதால், நியூ டவுன் ரயில்வே கேட்டை சீரமைத்து, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்.


திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக  காட்பாடியில் இருந்து செல்லும் யூனிட் ரயிலை ஜோலார்பேட்டையில் இருந்து  இயக்க,  சூப்பர் பாஸ்டாக  தரம் உயர்த்த,  மத்திய அரசு மற்றும்  ரயில்வே துறையை கேட்டு கொண்டார். 

நிகழ்வுகள்