திரு.J.அஸ்லம் பாஷா, அவர்கள் காங்கிரஸின் 131வது நிறுவன நாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி

வாணியம்பாடி, டிச.28: “சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திலிருந்து, அதன் வளர்ச்சிக்காக காங்கிரஸ் செய் தியாகங்களை நினைவு கூறுவோம். கட்சியின் நிறுவனர்கள் மற்றும் மூத்த தலைவர்களும் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமது உயிர்களை துச்சமாக நினைத்து தியாகம் செய்தனர்.

திரு. மகாத்மா காந்தி, திரு. ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி  ஆகிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்கள் உயிர்களை நாட்டின் வளர்சிக்காக தியாகம் செய்தனர்.

மேலும் தற்போது நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் வருங்கால பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி அவர்களின் நல்லெண்ணங்கள் நிறைவேற அவர்களுக்கு தக்க உறுதுணையாகவும் அவர்களின் கரங்களை மேலும் பலப்படுத்த மக்களும், கட்சியின் தொண்டர்களும் பாடுபட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம், அதைக் காக்க பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியின் மேல் அக்கறை உள்ள மக்களுக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று கூறினார்

விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.

நிகழ்வுகள்