வாணியம்பாடியில் தலைவர் E.V.K.S இளங்கோவன் 67 வது பிறந்த நாள் விழா

வாணியம்பாடி டிச 21: வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி  மாநில தலைவர் E.V.K.S இளங்கோவன் 67 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது ,நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஏ.எம்.பரீத் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமார் , SC/ST பிரிவு நகர தலைவர் ரவிக்குமார் ,மேற்க்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி ,பாராளுமன்ற இளைஞ்சர் காங்கிரஸ் பொது செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகர பொது செயலாளர் சமியுல்லா அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளரகளாக சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா மற்றும் சிறுபான்மை துறை ஆலோசகர் மோகன் காந்தி கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 3 குழந்தைகள்  உட்பட வார்டுயில் இருந்த  8 குழந்தைகளுக்கும் தங்க மோந்திரத்தை அணிவித்து தாய்மார்களுக்கு ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கினார்.இதனை தொடர்ந்து கட்சியினர் 25 பேர் ரத்த தானம் செய்தனர்.அப்போது காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது கடந்த ஆட்சியில் கண்ணியக்குமாரி மாவட்டத்தில் பட்டா இடங்களில் கட்டி உள்ள தேவாலயங்கள் அரசு மூடியுள்ளது.அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார் .ஆனால் ஆட்சி பொறுப் ஏற்று நாங்குஅரை ஆண்டு ஆகியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.நரேந்தர் மோதி ஆட்சியில்  கிறிஸ்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் .ஆகையால் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் கொண்டும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மை துறை ஆலோசகர் மோகன் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் கோமாளி சுப்பிரமணிசாமி .நாடாளுமன்ற கூடத்தை  காங்கிரஸ் வழக்குக்காக தான்  முடககுவது என்று கூறுவது பொய்.பாஜக வால் நாடாளுமன்றத்தை நடத்த முடியவில்லை .ஐந்து நாள் சுற்று பயணமாக பிரதமர் நரேந்தர் மோதி இந்தியா வருகிறார் என்று சொல்லும் அளவில் கேவலமாக ஆட்சி நடுத்துவதை நாட்டு மக்கள் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.நாடாளுமன்றத்தில் அமர்ந்து பாஜக மக்களுக்கு பதில் சொல்ல தகுதி கிடையாது .மக்கள் பிரச்சனைக்காக காங்கிரஸ் கட்சி  எங்கல்லாம் போரடுகிறதோ அங்கெல்லாம் சுப்பிரமணிசாமியை ஜோகர் கார்டு போல் பாஜக அரசு பயன் படுத்துகிறது.இவ்வார் அவர் பேசினார்.நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவர் சத்தியநாராயணன்,மருத்துவர் தன்வீர் அஹமத், கட்சியை சேர்ந்த அஸ்லம்,தினேஷ்,புஷ்பராஜ்,விஜயலக்ஷ்மி,கவிதா இளங்கோ உட்பட 200க்கும்  மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் கவியரசன் நன்றி கூறினார்.

p

p

p p

p
p

நிகழ்வுகள்