ஆம்பூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஆம்பூர், டிசம்பர் 19, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப் படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு.நசே ஜெ. ராமசந்திரன் ஆம்பூரில் சனிக்கிழமை கூறினார். நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது வழக்கு போடப் பட்டுள்ளது. இதைக் கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூர் நகராட்சி அலுவலகம் எதிரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கலந்திரா பி .பலவரதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நசே ஜெ. ராமசந்திரன் பேசியதவது:

முன்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேஹ்ருவால் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடங்கப்பட்டது, பிறகு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் அதைத் தொடர்ந்து நடதுவதர்க்கான முயற்சியை சோனியாவும், ராகுல் காந்தியும் எடுத்தனர். ஆனால் அவர்கள் மீது சுப்பிரமனிய சுவாமி, ஹெரால்டு பத்திரிக்கையின் சொத்துக்களை அபகரித்ததாக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்த  முகாந்திரமும் இல்லையெனக் கூறி அந்த வழக்கை சிபிஐ முடித்துக் கொள்ள முடிவு செய்து அதை நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் அந்த வழக்கை திரும்பவும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ள மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது பாஜக அரசின், அரசியல் பழிவாங்கும்  செயலாகும் என்றார். சட்டப்பேரவை  முன்னாள் உறுப்பபினர்  பாலூர் சம்பத், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் திரு. J.அஸ்லம் பாஷா, வேலூர் கிழக்கு மாவட்டத் தலிவர் டீக்காராமன், மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், ஆம்பூர் நகர தலைவர் பிரபு, ஒன்றியத் தலைவர்கள் ச. சங்கர், மின்நூர் ஜெ.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 அதன் பின் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு. J.அஸ்லம் பாஷா, அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, "இந்திய நாட்டிற்காக தியாகங்களை செய்துக் கொண்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ்  தலைவி அன்னை சோனியா காந்தி அவர்கள் மீதும் மற்றும் இந்தியாவின் முன்னேற்றதிர்க்காக பாடுப்பட்டுக் கொண்டிருக்கும் வருங்கால பாரத பிரதமர் திரு. ராகுல் காந்தி அவர்களின் மீதும் மோடியின் முகமூடி சுப்பிரமணியன் சுவாமியால் போடப்பட்ட, இந்த பொய் வழக்கு மற்றும் அதற்கு துணையாக உள்ள பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

photo photo

நிகழ்வுகள்