சிறுபான்மையினர் உரிமை நாள் முன்னிட்டு திரு.J. அஸ்லம் பாஷா அறிக்கை:

வாணியம்பாடி, டிசம்பர் 18, சிறுபான்மையினர் உரிமை நாள் முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு. J.அஸ்லம் பாஷா, அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களும், சிறுபான்மைத் துறை அமைச்சரும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மை தலைவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களின், நிறை குறைகளைக் கேட்டரிந்து, அதை பூர்த்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றும் சிறுபான்மை மாணவர்கள் அவரவர் தாய்  மொழியாகிய தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளை கட்டாய பாடமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் கிறிஸ்துவ  சகோதர்கள் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை எந்தவித அச்சமும், இடையூறும் இன்றி மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும்  கொண்டாட, பாதுகாப்பை அதிகரிக்க உறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வுகள்