தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி:

14th டிசம்பர், சென்னை : மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இன்று சென்னை மணப்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும்  சிறுபான்மை துறை சார்பாக வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. E.V.K.S.இளங்கோவன் அவர்கள் தலைமை ஏற்றார். தமிழ்நாடு சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு.J. அஸ்லம் பாஷா, அவர்கள் முன்னிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களை ரத்து செய்து, அதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் விதத்தில் இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ், சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவ நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஜெனரல் செக்ரட்டரி G.K.தாஸ், வர்த்தக அணி M.S.திரவியம், பொருளாளர் நசே ராமசந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

photo photo

நிகழ்வுகள்