கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக் கடனை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை

6th டிசம்பர், வாணியம்பாடி: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரவர் வீடுகளின் மீது வாங்கிய கடன்களை ரத்து செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா வேண்டுகோல் விடுத்துள்ளார்.
டாக்டர் அம்பேத்காரின் 59 வது நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வருகை தந்த காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளத்தால் மூழ்கி சென்னை மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களை நம்முடைய அனைத்து சமுதாயமக்களும் சாதி மத பேதமின்றி ஒன்று சேர்ந்து அவர்களை மீட்டு காப்பாற்றி வருகின்றனர்.இந்த செயல்பாடுகள் முற்றிலும் பெருமைக்குரியது.
வீடுகளை இழந்தும் மற்ற அணைத்து அடிப்படை வசதிகளையும் இழந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் வீடுகளின் மீது அவரவர் வாங்கிய வீட்டு கடன்களை ரத்து செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

photo photo

நிகழ்வுகள்