தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலருக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படும்

தமிழக முழுவதும் பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளை கட்டாய பாடமாக்கும் வரை காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை போராடும்.வாணியம்பாடியில் தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா பேட்டி.

வாணியம்பாடி டிஸ் 1: வாணியம்பாடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தன்னுடையை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்போது கூறியதாவது தமிழக முழுவதும் பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளை கட்டாய பாடமாக்க தீர்வுகாணும் வரை காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தொடர்ந்து போராடும்.சிறுபான்மை மொழியியல் சங்கங்கள் ,பள்ளிகள் ஆகியோர் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை வரவேற்கிறது.வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்ற உறுப்பினர் வார்டு பணிகள் நிறைவேற்றாத செயல் அலுவரை கண்டித்து மன்ற கூடத்தில் தீ குளிக்க முயன்றுள்ளார்.மேலும் மக்கள் நல பணிகள் பாதிப்புக்கு காரணமான செயல் அலுவலர் ஆளவந்தார் மீது மாவட்ட நிறுவாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

photophoto

நிகழ்வுகள்