இணையதள வெளியீட்டு விழா மற்றும் மாநில, மாவட்ட செயற்குழு கூட்டம்.

சென்னை, நவம்பர் 28. 2015.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில, மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதள வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைப்பெற்றது. விழாவுக்கு  தமிழ்நாடு சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு.J. அஸ்லம் பாஷா, அவர்கள் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தன்மான தலைவர் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்கள் கமிட்டி தன்மான தலைவர் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களது தலைமையில் இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது,

இது வரையில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை கைப்பேசியில் மட்டும் குறுந்தகவல்களை பரிமாறிகொண்டு முடங்கி கிடந்தது, ஆனால் இப்பொழுது திரு.J. அஸ்லம் பாஷா, அவர்கள் பதவி ஏற்றது முதல் காங்கிரஸ் சிறுபான்மை துறை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பாதைக்கு திரும்ப, மிகவும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.  இது மிகவும் பாரட்டுக்குரியது.

சிறுபான்மை துறை யின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால்  தன்னிடம் திரு.J. அஸ்லம் பாஷா, அவர்கள் மூலம் முறையிடலாம் என்றும் அறிவித்தார்

 

இணையதளம் மற்றும் ஆவணப்படம் மிகவும் நன்றாக உள்ளது என்றும் தொழில் நுட்ப துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க  வேண்டும்  என்றும் கூறினார்.

இவ்விழாவில் கட்சியில் பொருளாளர் நாசே ஜெ . இராமச்சந்திரன், மாநில வர்த்தகர் அணி தலைவர் எம். எஸ். திரவியம், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷியம், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

websitewebsite1

நிகழ்வுகள்