இந்திரா காந்தியின் 31வது நினைவு நாள்

வாணியம்பாடி பேருந்துநிலையம் எதிரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 31வது நினைவு நாள் முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலத்தினார்.பின்னர் செய்தியாளர்களை பேட்டியில் கூறியதாவது இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த தேசத்தில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் ,என்றுமே இந்தியா வல்லரசு நாடகா இருக்கும்மானால் அதற்க்கு ரத்தம் சிந்திக்க தயாராக உள்ளேன் இன்று கூறியிருந்தார். அதைபோல் இந்தியா மண்ணுக்காக 32 குண்டுகளை சுமந்து தியாகம் செய்தார்.மத்திய அரசு இந்திராகாந்தியின் தபால் தலையை நீக்கி அவறுடையே தியாகத்தை மறைக்கபார்கிறது, காங்கிரசை ஒழிக்கவே மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இமையமலை போல் உள்ள காங்கிரஸ் கட்சியை குண்டு ஊசி போல் செயலை செய்து அழிக்க நினைக்கிறார்கள் .உலகம் இருக்கும் வரை காங்கிரஸ் இயக்கம் இருக்கும் .இந்திய அரசியல் ஒரு நாடக மேடை அதில் மோடி ஒரு காமெடி நடிகராக உள்ளார்.இவ்வார் அவர் கூறினார். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத்அகமத், மாவட்ட துணைத் தலைவர் சாந்தகுமார், மாவட்ட சிறுபான்மைதுறை தலைவர் இலியாஸ்கான், எஸ்சிஎஸ்டி பிரிவு நகர தலைவர் ராஜ்குமார், மாவட்ட அமைப்பாளர் கவியரசன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைசல்அமீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முஹம்மத் பாஷா, புல்லூர்முருகன், ஆனந்தன், செந்தில்குமார், கார்த்திக் , முருகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 


ig2  

நிகழ்வுகள்