கண்டன ஆர்பாட்டம் - தலித் குழந்தைகள் எரித்து கொலை.

வாணியம்பாடி 24 அக் : பாஜக ஆட்சியில் மத்தியிலும் சரி ஹரியானா மாநிலத்தும் சரி தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் எவ்வாறு படுகொலை செய்யவேண்டும் என்ற வளர்ச்சி தான் பாஜகவின் வளர்ச்சியாகும். வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் ஜே. அஸ்லம் பாஷா பேட்டி.                                            

ஹரியான மாநிலத்தில் இரண்டு குடும்பத்தின் பிரச்சனையால் இரவோடு இரவாக வீட்டுடன் இரண்டு தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நகர காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி எஸ்.டி பிரிவு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்படத்திர்க்கு நகர காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் சக்தி ,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத் அஹமத் ,மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் இலியாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர் ராஜேஷ் அணைவரையும் வரவேற்றார்.சிறுப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் ஜே. அஸ்லம் பாஷா கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து கண்டானுறையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் ஹரியான ஆளும் பாஜக அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது பாஜக ஆட்சியில் மத்தியிலும் சரி ஹரியானா மாநிலத்தும் சரி தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் எவ்வாறு படுகொலை செய்யவேண்டும் என்ற வளர்ச்சி தான் பாஜகவின் வளர்ச்சியாகும்.இந்தியாவின் எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் இல்லை.இதற்க்கு ஹரியான மாநிலத்தில் இரு குழந்தைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் சாட்சியாக உள்ளது. நாய் மீது கல் எரித்தால் அதற்க்கு அரசு பொறுப்பாகாது மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை நாய்க்கு ஈடாக கருது கூறிய வி.கே சிங் கருத்து கண்டனக்கூரியது.இவ்வார் அவர் கூறினார் .ஆர்பாட்டத்தில் புல்லூர் முருகன்,எம்.பி முருகன் ,ஆனந்தன் கே.எம்.பைசல் அமீன்,கவி அரசன்,செந்தில் குமார் ,கார்த்திக் குமார் ,சிவக்குமார்,சுகுமார் ,வெங்கடேசன்,சுதாகர் ,தேன்மொழி ,மங்கலட்சுமி,கிரிஜா ,விஜயலக்ஷ்மி,அஹமத் கான்,சபியுல்லா ,சமி ,அஸ்லம் உட்பட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் பாஷா நன்றி கூறினார்.

                                                 

நிகழ்வுகள்