காந்தி ஜெயந்தி

வாணியம்பாடியில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜ் நினைவு நாள் முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
வாணியம்பாடி 02 அக் : வாணியம்பாடியில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜ் நினைவு நாள் முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை சார்பில் காந்தி மற்றும் காமராஜ் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி  நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் பரீத் அஹமத் தலைமை வகித்தார்.

காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணை தலைவர் சாந்த குமார் ,மாவட்ட செய்லாளர் குமார் ,வாணியம்பாடி சட்டமன்ற இளைஞ்சர் காங்கிரஸ் தலைவர் பைசல் அமீன்,மாவட்ட அமைப்பாளர் SC/ST பிரிவு கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காங்கிரஸ் SC/ST பிரிவு நகர தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வர்வேற்றார்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை மாநில தலைவர் வழக்கறிஞர் ஜே. அஸ்லம் பாஷா கலந்து கொண்டு காந்தி ஜெயந்தி முன்னிட்டு புதூர் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தினார்.இதனை தொடர்ந்து காமராஜ் 40வது நினைவு நாள் முன்னிட்டு கச்சேரி சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலத்தினார்.நிகழ்ச்சியில் கட்சியை சேர்ந்த பாஷா,ரியாஸ் ,மன்சூர் ,வினோத் ,குமரவேல்,வெங்கடேசன்,ஷபி,சங்கர் உள்பட 100க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.முடிவில் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் இலியாஸ் கான் நன்றி கூறினார்.


நிகழ்வுகள்