கிஸான் சம்மன் பேரணி

டெல்லியில் செப்டம்பர் 20, 2015  அன்று கிஸான் சம்மன் பேரணியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் திரு J.அஸ்லம் பாஷா அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார்.
மத்தியில் ஆளும் பிஜேபி அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து, அகிலாகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரது தலைமையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் பேரணி நடை பெற்றது. இதில் பங்கேற்ற திரு.அஸ்லம் பாஷா கூறுகையில், நாட்டில் விவசாயிகள் படும் வேதைனைகள் கஷ்டங்களை நினைத்து மனம் வருந்துவதாகவும் விவசாயிகளின் துயர் துடைக்க கடுமையாக போராடப்போவதாகவும் தெரிவித்தார்.


நிகழ்வுகள்