உண்ணாவிரத போராட்டம்

சிறுபான்மை மாணவர்களுக்கு தாய்மொழியை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் வாணியம்பாடியில், புதன் கிழமை செப்டம்பர் 9, 2015 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரச்சிருபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமை வகித்து பேசியதாவது :
தமிழகத்தில் உருது, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசுபவர்கள் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் சிறுபான்மையினர். தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் கடந்த 2006ம் ஆண்டு முன்பு இருந்ததை போல, அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகளின் தாய்மொழியை தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கு மட்டுமே உண்டு. எனவே சிறுபான்மையினரின் தாய்மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத்தத்தை ஆம்பூர் சாய் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பர்வேஸ், சித்திக், யூசுப், ராபர்ட், ராஜசேகர், கபீல்ராம், பிரசாத் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 5 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ பாலூர் E.சம்பத் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

நிகழ்வுகள்