பக்ரீத் நல்வாழ்த்துகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை தலைவர் திரு.அஸ்லம் பாஷா அவர்களின் வாழ்த்து செய்தி.

இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளாம் பக்ரீத். இறை தூதர் இபுராஹீம் அவர்களின் புனிதமும் அர்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையை போற்றும் நல்லதொரு நாள்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது பிள்ளையை பலி கொடுக்க முயன்ற இபுராஹீம் நபிகளைத் தடுத்து, குழந்தையை பலியிட வேண்டாம் அதற்கு பதிலாக ‘’ஆட்டுக்குட்டியை பலியிட்டு தங்களின், நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்’’ என்று இறைவன் கூறினான். அதனடிப்படையில் ஆட்டுக்குட்டியை பலியிட்டு பகிர்ந்துண்ணும் வழக்கம் இஸ்லாமியர்களிடம் இருந்து வருகிறது. அதுவே பக்ரீத் பெருநாளாக கொண்டாடப்படுகிறது. தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்நன்னாளில் மக்களிடையே அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும் பெருகிட, நம் நாட்டில் மதசார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படவும், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றிடவும், ஏழைகள் வாழ்வு உயர்ந்திடவும், குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்புனிதம் மிகுந்த தியாக திருநாளில் இபுராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூர்ந்து, உற்ற நண்பர்களுடன் உறவாடி, நல்வழி காட்டிய நபிமார்களின் வழியில் இறையருளுடனும் தியாகத்தின் உன்னதத்தை உணர்ந்து நல்வாழ்க்கை வாழ்வோம்.
அனைவருக்கும் எமது பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
இங்ஙனம் ; வழக்கறிஞர். J.அஸ்லம் பாஷா.

நிகழ்வுகள்