நியூடவுன் ரயில்வே சுரங்கபாதை பணிகள் உடனடியாக துவங்கி முடிக்கப்படும். வட்டாட்சியர் உறுதி அளி

நியூடவுன் ரயில்வே சுரங்கபாதை பணிகள் உடனடியாக துவங்கி முடிக்கப்படும். வட்டாட்சியர் உறுதி அளித்ததின் பேரில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அசலம் பாஷா தொடர் உண்ணாவிரதம் கைவிட்டார்.

 

 

 

 

வாணியம்பாடி, ஜூலை 3 : வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரின் இடைப்பட்ட பகுதியில் நியூடவுன் ரயில்வே கேட் அமைந்திருந்தது. இங்கு சுரங்கப்பாதை அமைக்க கோரி மக்கள் நீண்ட கால கோரிக்கை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான பூஜைகள் போடப்பட்டு நியூடவுன் ரயில்வே கேட் அருகே இருபுறமும் 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனால் பூஜை போட்டு 9 மாதங்கள் கடந்தும் இது நாள் வரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 


 

 

 

 


 

 

நியூடவுன் ரயில்வே கேட் சுரங்கப்பாதை பணிகள் முடங்கி உள்ளதை கண்டித்தும், உடனடியாக பணிகள் தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே உள்ள இந்திரகாந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா வாயில் கருப்பு துணி கட்டி காலை 9 மணி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 


 

 

 


 

 

 

 

இதனையறிந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதம் தொடர்ந்து மாலை 7 மணி வரையில் நீடித்து வந்த நிலையில் வாணியம்பாடி வட்டாட்சியர் கிருஷ்ணவேணி , டிஎஸ்பி முரளி, காவல்ஆய்வாளர்கள் ராமசந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் நேரில் சென்று உண்ணாவிரதம் இருந்த அஸ்லம்பாஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணிகள் உடனடியாக தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும். ஒப்பந்தரார் நேரில் வந்து அதற்கான உத்தரவாதம் அளித்த பின்பு தான் உண்ணாவிரதம் கைவிடப்படும் என அவர் கூறினார். இதனையடுத்து வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரயில்வே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இன்று முதல் இடைவிடாது தொடர்ந்து பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் அத்தகவலை உண்ணாவிரதம் இருந்த அஸ்லம்பாஷாவிடம் எடுத்து கூறி உறுதி அளித்ததின் பேரில் இரவு 7.30 மணிக்கு உண்ணாவிரத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

 

 

நிகழ்வுகள்