*5 அம்ச திட்டங்களையும் திட்ட கமிஷ்னையும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக மத்திய அரசு ரத்து செய

*5 அம்ச திட்டங்களையும் திட்ட கமிஷ்னையும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று காங்கிரஸ் கமிட்டியின் சிறுபாண்மைத்துறை மாநில தலைவர் டாக்டர்.அஸ்லம் பாஷா குற்றசாட்டு தெரிவித்துள்ளார்*

 

 

 

 

 

 

கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்ட நாளான இன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மத்திய அரசு அலுவலகமான எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைத்துறை சார்பில் வேலூர் மேற்கு மாவட்ட சிறுபாண்மைத்துறை தலைவர் இலியாஸ் கான் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைத்துறை மாநில தலைவர் டாக்டர்.அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.இந்த ஆர்பாட்டத்திற்கு சிறுபாண்மைத்துறை மாவட்ட துணைத்தலைவர்கள் ஜலீல் அகமது,கபீருதின், நகர சிறுபாண்மைத்துறை தலைவர் முதசீர் பாஷா,நகர எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜ்குமார்,சட்டமன்ற தொகுதி இளைஞ்சர் காங்கிரஸ் தலைவர் பைசல் அமீன்,முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத் அகமது,ஆலங்காயம் ஒன்றிய தலைவர் ஜெயபால்,கவியரசன்,ஈஸ்வரன் உட்பட இந்த ஆர்பாட்டத்தில் வாணியம்பாடி,ஆம்பூர்,திருப்பத்தூர்,ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் என சுமார்500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

 

 

 

 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபாண்மைத்துறை மாநில தலைவர் டாக்டர்.அஸ்லம் பாஷா:-

பெரிய முதலாளிகளிடம் இருந்து வரா கடன்களையும்,வரிகளையும் வசூலித்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செம்மைபடுத்த வேண்டியதுதான் ஒரு அரசின் கடமை என்பதை குறிகோளாக கொண்டு காங்கிரஸ் அரசு 5 அம்ச திட்டங்களையும் திட்ட கமிஷ்னையும் கொண்டுவந்தது.அந்த 5 அம்ச திட்டங்களையும் திட்ட கமிஷ்னையும் யாருக்கும் தெரியாமல் தற்போது ஆட்சி செய்துவரும் மத்திய அரசு மறைமுகமாக ரத்து செய்துள்ளது.மேலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த அரசு மூலமாக ஏழை எளிய மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.கருப்பு பணத்தை மீட்டு ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் போடுவதாக கூறிய மத்திய அரசு பண மதிப்பிளப்பு காரணாமாக ஏழை எளிய மக்களை கொன்று குவிக்கிறது. இதனால் 5.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக குறைந்து உள்நாட்டு உற்பத்தியை குறைத்து உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இருந்த இந்தியா தற்போது வளரும் நாடாக உள்ளது.

 

 

 

 

 

மேலும் அரசு வெளியிட்ட ரூ.10 நாணயத்தை முடக்கப்பட்டதாக வரும் வதந்தியால் இன்று மக்கள் வாங்க தயங்குகிறார்கள்.வங்கிகள் வாங்க மறுக்கிறது.இதை மத்திய அரசு ரூ.10 நாணயம் முடக்கப்பட்டதாக வரும் வதந்தி குறித்து உடனடியாக விளக்கம் அளித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுகொண்டார்.

 

 


 

 

நிகழ்வுகள்