அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளை கல்வி புரட்சி தினமாக அறிவிக்க வேண்டும்-! மத்திய அரசுக்கு காங்கிர

அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளை கல்வி புரட்சி தினமாக அறிவிக்க வேண்டும்-! மத்திய அரசுக்கு காங்கிரஸ் சிறுபாண்மைத்துறை கோரிக்கை-!

 


கல்வித் தந்தை அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை கல்வி புரட்சி தினமாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைத்துறை மாநில தலைவர்.டாக்டர் அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

 

 

மறைந்த முன்னாள் கல்வியமைச்சர் அபுல்கலாம் ஆசாத் அவர்கள் இந்தியாவின் முதல் கல்வியமைச்சராவார். நாட்டில் கல்லாமை எனும் இருளை நீக்கி கல்வி எனும் அறிவொளியை உருவாக்கி தந்த மாமேதை அபுல்கலாம் ஆசாத். கல்வித்துறையில் பல புரட்சிகளை செய்ததால் ,கல்வித் தந்தை என அனைவரலாலும் இன்று வரை அழைக்கப்பட்டு கொண்டிருப்பவர்.

 

 

 

இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில நமது நாட்டில் முதன் முதலில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவியவர். கல்லூரிகளில் முதன் முதலில் பல்கலைகழக மானியக் குழு வை ஏற்படுத்தியவர்.

 

சிறந்த பத்திரிக்கையாளராகவும் தலைசிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர். தனது முப்பத்தி ஐந்து வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்,தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கிலாஃபத் இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.

 


இத்தனை உயரிய அம்சககளையும் கொண்ட பாரத ரத்னா டாக்டர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை கல்வி புரட்சி தினமாக அறிவிப்பதோடு, நாடு முழுவதும் இலவச கல்வி திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் பாரத ரத்னா டாக்டர் அபுல்கலாம் ஆசாத்தின் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

நிகழ்வுகள்