வாணியம்பாடியில் இருந்து மேற்கு ஆப்பிரிகாவிற்கு 3 மாத ஒப்பந்தத்தில் டவர் அமைக்கும் பணிக்கு செ

வாணியம்பாடியில் இருந்து மேற்கு ஆப்பிரிகாவிற்கு 3 மாத ஒப்பந்தத்தில் டவர் அமைக்கும் பணிக்கு சென்ற 23 கூலி தொழிலாளிகள் சம்பளம் மற்றும் உணவு கிடைக்காமல் தவிப்பு தாய்நாடு திரும்ப உதவி செய்ய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை தலைவா் அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை,மல்லகுண்டா,நாட்ரம்பள்ளி,ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து23 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மல்லகுண்டா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற ஏஜெண்ட் மூலமாக தலா ரூ.25 ஆயிரம் செலுத்தி மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் சினிகால் நகருக்கு மின்சார டவர் அமைக்க மாதம் 30 ஆயிரம் சம்பளம் என்று3 மாத ஒப்பந்தத்தில் சென்றுள்ளனர்.அங்கு அவர்களுக்கு ஒரு மாதம் மட்டும் 9500 மட்டும் சம்பளமாக கொடுத்துள்ளனர்.பின்னர் ஒப்பந்த காலம் முடிந்தும் ஒரு மாதம் ஆகிறது.இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் உணவு வழங்காமல் கொடுமைபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.மேலும் தங்களை தாய்நாட்டிற்கு அனுப்பாமல் தங்கள் பாஸ்போர்ட் பறித்து வைத்துக்கொண்டு

கடந்த 10 நாட்களாக தங்களை அடைத்து வைக்கப்பட்டு அதிகமாக கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் மேலும் அவர்களிடம் இருந்து பணம் வராததால் குழந்தைகளை வைத்துகொண்டு மிகவும் அவதிபட்டுவருவதாகவும் மேற்கு ஆப்பிரிகாவில் தவித்து வரும் கூலி தொழிலாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

தங்களை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க வெளியுறவுத்துறை தூதரக அதிகாரிகள் இடம் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது தமிழ் நாட்டில் இருந்து படிப்பறிவில்லாத நபர்கள் வெளிநாடு சென்று பிரச்சனைகள் ஏற்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் ஒரு தனி அமைப்பான அமைப்பு COMMISSIONERATE OF REHABILITATION AND WELFARE OF NON-RESIDENT TAMILS என்ற அமைப்பிற்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் தங்களை தாய்நாடு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளத்தை வெளியுறைத்துறை அமைச்சா் சுஷ்மா சுவராஜ் உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுள்ளாா்

நிகழ்வுகள்