சலுகைகள்

கல்வி

இந்திய நாட்டில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன
இதை நாம் சரியாக பயன்பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். குறிப்பாக pre-metric மற்றும் post-metric கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களிடம் மற்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் அரசு பல நல்ல சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள சில கல்வி உதவி திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

 • PRE-METRIC SCHOLORSHIP
 • POST-METRIC SCHOLORSHIP
 • தகுதி மற்றும் தேவை
 • மௌலானா ஆசாத் தேசிய கூட்டு வாய்ப்பு
 • தயா சவேரா திட்டம்
 • நயி உதான் – முதல் கட்ட தேர்வுகளை முடிப்பதகான திட்டம்
 • பதோ பிரதேஷ் – வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன்களில் வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம்
 • நாலந்தா திட்டம் – சிறுபான்மை உயர்கல்வி அமைப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் திட்டம்.

பொருளாதாரம்

தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள்,கிருஸ்துவர்கள்,
சீக்கியர்கள்,புத்த மதத்தினர்,பார்சியர் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்கள் உள்ளன.

 • தனிநபர் கடன் திட்டம்;
  இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் தொழில் தொடங்கிடவும் மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கடன் வழங்கப்படுகின்றது.
 • சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி கடனுதவி
 • கைவினை மற்றும் மரபுசார்ந்த தொழில்கள் அபிவிருத்தி கடனுதவி
 • தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள்
 • இலகுரக போக்குவரத்து வாகன கடன்
 • விவசாய தொடர்பான தொழிர்க்கடன்.

கல்விக்கடன் திட்டம்

சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தொழிர்நுட்பாக்கல்வி, குறுகிய கால் உயர் திறன் வளர்ச்சி  படிப்பு பயில்பவர்களுக்கு (SHORT TERM HIGH SKILL DEVELOPMENT COURSES) கல்விக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

கறவை மாடு கடனுதவி

ஒரு கறவை மாடு வாங்கிட ரூ 25000 முதல் ரூ 35000 வரை வழங்கப்படுகின்றது. 6% ஆண்டு வட்டியுடன் திரும்ப செலுத்தலாம், காலம் அதிகபட்சம் 36 மாதங்கள்.

ஆட்டோ கடன்

இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வழங்கப்படுகின்றது.

சிறுகடன் திட்டம்

சிறுபான்மை மக்கள் சுய உதவிக்குழுக்களை அமைத்து தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம்/சிறு தொழில் செய்து தங்கள் வருமானத்தை பெருக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஆண்டிற்கு 7% என்ற குறைந்த வட்டியில் சிறுகடன், நபர் ஒருவருக்கு ரூ1,00,000 க்கு மிகாமல்வழங்கப்படுகின்றது. காய்கனி கடை,மீன் வியாபாரம்,பலகாரக்கடை,தையல் கடை,கைத்தொழில்கள்,சிறுவணிகம் போன்றவற்றிற்கு இந்த கடன் வழங்கப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலோ அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாலரிடமோ அணுகவும், அல்லது காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையை அணுகவும்.