ஏன் சிறுபான்மை துறை ?

   
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து மதத்தினரும், இனத்தினரும் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் வெள்ளைக்காரனை எதிர்த்து, ஒற்றுமையுடனும், துணிவுடனும் போராடி பெறப்பட்டதே சுதந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே.
சாதி, மத,இன பாகுபாடின்றி சுதந்திரம் கிடைத்த பிறகு மத அடிப்படையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டது. அதிகப்படியான இஸ்லாமிய மக்கள் அவர்களின் விருப்பத்துடன் இடம் பெயர்க்கப்பட்டனர். குறைந்த எண்ணிக்கயில் உள்ள இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

“இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம்,புத்தம் மற்றும் சைவம், வைணவம் என பல தரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்”.

அதிகப்படியான இந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இருந்தமையால் அவர்கள் பெரும்பான்மையினராகவும், குறைந்த எண்ணிக்கை உடைய மக்கள் சிறுபான்மையியினராகவும் பிரிக்கப்பட்டனர். சிறுபான்மையினர் ஒதுக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நம் காங்கிரசால் துவக்கப்பட்டதே சிறுபான்மை துறை இயக்கம். இத்துறையை துவங்கி அதிக அளவில் பொறுப்பெடுத்து நல்வழி நடத்தி வருகிறது. சிறுபான்மையினர் மட்டுமின்றி அனைத்து பிரிவினருக்கும், அனைத்து மாகாணத்திற்கும் சாதி,மத  பாகுபாடின்றி இந்தியாவில் வாழும் அனைவருக்கும் நற்தொண்டாற்றி வருகிறது.

பிரிவுப்பட்டிருக்கும் இந்தியாவை இணைக்கும் ஒரு பாலமாகவே காங்கிரஸ் இயக்கம் விளங்குகிறது. சிறுபான்மை துறையினரின் குரல் ஓங்க அவர்களது கஷ்ட நஷ்டங்களை மத்திய மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் எடுத்துரைத்து, குறைதீர்க்கவும், சிறுபான்மையினரின் நலம் காக்கவும் இத்துறை ஆரம்பிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி ஒரு நாணயம் போன்றது. அதில் ஒரு பக்கம் சிறுபான்மையினரும் மற்றொரு பக்கம் தலித் சமுதாயமுமாகவும் உள்ளது.
இவ்விரு சமுதாய மக்களுக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது என்று திரு அஸ்லம் பாஷா கோடிட்டு காட்டினார்.
தற்போது அகில இந்திய சிறுபான்மை தலைவர் திரு.குர்ஷித் அகமது செய்யது அவர்களின் தலைமையில் மக்கள் பணி மற்றும் நற்காரியங்களில் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக திரு. அஸ்லம் பாஷா இருந்து வருகிறார்.