தலைவர்

திரு.அஸ்லம் பாஷா அவர்கள் தமிழ்நாட்டில் 1973¬-ல், காங்கிரஸ் கட்சியின் மீது தீராத பற்று கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். தனது கல்லூரி பருவத்திலேயே காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற துவங்கினார். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததால், ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறார். இதனால் குறுகிய காலத்திலேயே செல்வாக்கு மிகுந்த தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

   
‘’இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண நான்னயம் செய்து விடல்’’


என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர். சிறுபான்மையினர் மட்டும் அல்லாது மற்ற மக்களுக்கும் ஒரு துன்பம் என்றால் முன் நின்று போராடக்கூடிய ஒரு போராளி. கிராமத்தில் இருக்ககூடிய விவசாயிகள், நெசவாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் அனைவரிடத்திலும் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கைளை கொண்டு சேர்க்கும் வகையில் அயராது உழைக்க கூடிய ஒரு படித்த இளைஞர்.

கட்சியில் உள்ள தொண்டர்களை தட்டி எழுப்பி விழிக்க மட்டும் செய்யாது வீறுகொண்டு எழுந்து இயக்க களப்பணி ஆற்றிட ஊக்குவிக்கும் தன்மை கொண்டவர். தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில கட்சிகளின் மக்கள் விரோத செயல்களை எதித்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் உண்மையை எடுத்துரைத்து, இயக்கம் எழுச்சி நடைபோடுவதற்கு அயராது பாடுப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, பொது செயலாளர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் வழிக்காட்டுதலின் பேரில் தமிழ்நாடு சிறுபான்மை துறை தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.